June 30, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிளா.திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்த பின்னரே வழக்கறிஞராக பொறுப்பேற்பேன் என்று உறுதியுடன் இருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னா் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்ய ஸ்ரீ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்த சத்தியஸ்ரீ சர்மிளா பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.