June 29, 2018
தண்டோரா குழு
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோனே.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தின் மூலம் தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில்,தீபிகா படுகோனே சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
“சினிமாவில் எனது ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.நான் நடிக்க வந்த புதிதில் பாலிவுட் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கவர என்னுடைய மார்பகங்களை பெரியதாக்குமாறு பலர் ஆலோசனை வழங்கினர்.மார்பகம் மட்டுமில்ல இன்னும் சில உறுப்புகளிலும் மாற்றம் செய்ய சொன்னார்கள்.ஆனால் வாய்ப்புகளுக்காக உடலுறுப்புகளை செயற்கையாக மாற்றம் செய்ய மாட்டேன்.வாய்ப்புகள் திறமைக்காக வர வேண்டுமே தவிர உடலுக்காக வர கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.ஆரம்ப காலத்தில் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டேன்.தற்போது அதில் இருந்து மீண்டும் விட்டேன். இல்லை என்றால் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றிருப்பேன் எனக் கூறியுள்ளார்”.