• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலீஸ் செய்த கொலையை பற்றி பேசுங்கள் சத்குருவுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

June 28, 2018 தண்டோரா குழு

போலீசார் செய்த கொலையை பற்றி பேசுங்கள் என சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.இதையடுத்து,பல எதிர்ப்புகள் மற்றும் இழப்புகளுக்கு பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இதற்கிடையில்,ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் ஒன்றும் காப்பர் உருக்கலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது.ஆனால் இந்தியாவுக்கு அதிக அளவில் காப்பர் தேவைப்படுகிறது என்று எனக்கு தெரியும்.நாம் காப்பரை தயாரிக்கவில்லை என்றால் சீனாவிடம் இருந்து தான் வாங்க வேண்டும்.சுற்றுச்சூழல் விதிமீறல்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும்.பெரிய வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலையாகும் எனக் கூறியுள்ளார்.

சத்குருவின் கருத்து பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சித்தார்த்,முதல்வர் அலுவலகம் ஒரு வெட்கக்கேடு.பிரதமர் யோகாவை தவிர வேறு எது பற்றியும் பேச மாட்டார்.காப்பர் உருக்குவதின் பலன்களை பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு.மக்கள் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர்.மக்களை சுடுவது கொலை ஆகும்.கொலை பற்றி பேசுங்கள்.என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க