June 28, 2018
தண்டோரா குழு
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.2வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் 10 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்தாண்டு தமிழகத்தில் நீட்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்கள் பெற்றுள்ளனர்.501-599 வரை 188 மாணவர்களும்,451-500 வரை 306 மாணவர்களும்,401-450 வரை 750 மாணவர்களும்,351-400 வரை 1,308 மாணவர்களும் 301-350 வரை 2,158 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும்,மருத்துவ படிப்புக்கு 3ஆம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பமும் ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.