June 27, 2018
தண்டோரா குழு
பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையான பூனம் பாண்டே.இவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது,இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வணமாக ஓடுவேன் எனக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.இது தவிர அவ்வப்போது தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.இது குறித்து நடிகை பூனம் பாண்டே டிவிட் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,பிளாஸ்டிக் தடை எதற்காக செய்யப்பட்டது.யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ,அவர்கள் யாரும் சாலையில் சுற்றாதீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.மேலும்,அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) உண்டா? என்றும் பதிவிட்டுள்ளார்.பூனம் பாண்டே இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.