• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்

August 25, 2018 findmytemple.com

சுவாமி:மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர், மகாலட்சுமிநாதர்.

அம்பாள்:லோகநாயகி.

மூர்த்தி:செல்வப் பிள்ளையார், சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி.

தீர்த்தம்:நீலதீர்த்தம்(மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் அழைக்கப்படும்).

தலவிருட்சம்:விளாமரம்.

தலச்சிறப்பு :தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் 19வது சிவத்தலமாகும்.மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருநின்றியூர் லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவிலும் ஒன்று.இத்தலம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது.கொடிமரம் இல்லை. பலிபீடமும்,நந்தியும்,கொடிமரத்து விநாயகரும் உள்ளது.வெளிப்பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது.அடுத்து பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம்,வள்ளி,தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர்,நால்வர்,மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

நவக்கிரக சந்நிதி அடுத்து பைரவர்,சந்திரன் ஒரே சந்நிதியில் உள்ளனர்.துவார விநாயகர், தண்டபாணி,துவாரபாலகர்களை வழிபட்டு,உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி,வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது.

மேலும் படிக்க