June 26, 2018
தண்டோரா குழு
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
அணைகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில்,இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி,சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும்,ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மசோதாவை நிறைவேற்றும் பணிகளை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறியது.முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.