• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரழகன் பட இயக்குநர், தேசிய விருது வென்ற சசி சங்கர் மரணம்

August 10, 2016 தண்டோரா குழு

நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற படத்தை இயக்கிய சசி சங்கர் இன்று கேரளாவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 57. சசி சங்கர் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

மேலும், 1993-ல் நரயம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் இயக்கிய குஞ்ஞி கூனன் படத்தைத்தான் பின்னர் சூர்யா நடிப்பில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் செய்து தமிழில் அறிமுகமானார் சசி சங்கர்.

இதைத் தொடர்ந்து சர்க்கார் தாதா என்ற மலையாளப் படத்தையும் பகடை பகடை என்ற தமிழ்ப் படத்தையும் அவர் இயக்கினார். இப்போது மலையாளத்தில் மிஸ்டர் பட்லர் 2 படத்தை இயக்கி வந்தார்.

சர்க்கரை நோயாளியான சசி சங்கர், இன்று தனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததைப் பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுவிடம் உதவியாளராக இருந்த சசி சங்கர், தனது முதல் படத்திலேயே பிராமணப் பெண் அரபி மொழி கற்றுத் தரும் கதையைத் தேர்வு செய்து இயக்கினார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

குஞ்ஞி கூனன் படத்தின் மூலம் திலீப் மலையாளத்தில் பெரிய நடிகராக உயர்ந்தார். மறைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

மேலும் படிக்க