June 25, 2018
தண்டோரா குழு
அறிமுகம் செய்யபட்ட சில மாதங்களிலேயே ஜியோ சிம் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வர்காக உருவெடுத்துள்ளது.
இந்தியா முழுக்க திடீர் என்று ஜியோ வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.முக்கியமாக தமிழகத்தில் இருந்து நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அன்லிமிடெட் 4ஜி இலவச இணைய சேவை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் தான். ஜியோ வருகைக்கு பின் பல சிம் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தது.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு பலருக்கும் எடுக்கவில்லை. பின் ஏர்செல் நிறுவனம் மொத்தமாக மூடப்பட்டது. இதனால் பலர் ஜியோ நெட்வர்க்கு மாறினர். இந்நிலையில், ஜியோ நெட்வொர்க் தற்காலிக செயலிழந்துள்ளது. இந்தியா முழுக்க இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு ஜியோ வேலை செய்யாமல் போய் இருக்கிறது. இரவு 9 மணிக்கு சரி ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில மணி நேரங்களாக வாய்ஸ் கால், இணையம் இயங்கவில்லை. கால் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிபட்டு வருகிறார்கள்.