June 25, 2018
தண்டோரா குழு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை,காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது.மக்கள் பிரச்சனையை விடுத்து,ஆளுநர் விவகாரத்தை மட்டுமே திமுக கையில் எடுத்துள்ளது.சட்டத்தில் என்ன இருக்கிறதோ,அதனையே அறிக்கையாக ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
எனது சுய உழைப்பினால் தான் அரசியல் கட்சிக்கு தலைவராக வந்துள்ளேன்.பாமக குறித்த கருத்துக்காக என்னை மன்னிப்பு கேட்க சொல்லி அறிக்கை விடுவதா?என கேள்வி எழுப்பினார். மேலும்,இயக்குனர் கவுதமன்,ப்யூஸ்மனுஷ்,நடிகர் மன்சூர் அலிகான்,வளர்மதி போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது”.எனக் அவர் கூறினார்.