• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகை, பணம் வேண்டாம் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக தாருங்கள்..

June 25, 2018 தண்டோரா குழு

ஒடிஷாவில் “நகை, பணம் வேண்டாம் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக தாருங்கள்..”என அனைவரையும் மணமகன் வியக்க வைத்துள்ளார்.

திருமணத்தின் போது மணப்பெண் வீட்டாரிடம் பணம்,நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுவது வாடிக்கையாகிவிட்டது.ஆனால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம்,நகைக்கு பதிலாக 1000 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்ட நிகழ்வு நடந்துள்ளது.

ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்திலுள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருபவர் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால்.இவருக்கும் ராஷ்மிரேகா பாய்தல் என்ற ஆசிரியைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அப்போது,பெண்ணின் தந்தை திருமணத்திற்காக வரதட்சனை அளிக்க முன்வந்த போது அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சரோஜ்கந்தா,வரதட்சனை பெற்றுக்கொள்வதில்லை என தனக்குத்தானே சத்தியம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும்,மணப்பெண்ணின் தந்தை வரதட்சனை கொடுப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.இதனால், சரோஜ்கந்தா அவரிடம் 1000 பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக அளிக்குமாறு கூறியுள்ளார்.இதையடுத்து,திருமணதிற்கு முந்தைய நாள் ஆசிரியர் சரோஜ்கந்தாவின் வீட்டிற்கு வரதட்சனையாக 1000 மரக்கன்றுகளை அவரின் மாமனார் அனுப்பி வைத்தார்.இதில்,700 மா மற்றும் 300 செர்ரி வகை மரக்கன்றுகள் அடங்கும்.அதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது.அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியின் போது 1000 மரக்கன்றுகளை வேன் ஒன்றின் மூலம் எடுத்து வந்த சரோஜ்கந்தா,பின்னர் அவற்றை கிராம மக்களிடம் பரிசாக வழங்கினர்.அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து ஆசிரியர் சரோஜ்கந்தா கூறும்போது,

“நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும்,அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன்.அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.மரக்கன்றுகள் நடுவதால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய இயலும்.பழ மரங்களை மக்கள் விரும்பி வளர்ப்பதால் பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக வாங்கினேன்.எனது மனைவியும் ஆசிரிரியையாக இருக்கிறார்.நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடமும்,பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” எனக் கூறியுள்ளார்.

மேலும்,இந்த திருமணத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உட்பட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன.திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.ஆசிரியர் பிஸ்வால் ‘மரம் நண்பன்’ என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க