June 25, 2018
தண்டோரா குழு
கோவை- கரூர் இடையே அமைக்க இருக்கும் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை- கரூர் இடையே தேசிய கிழக்கு புறவழிச்சாலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இத்திட்டத்தினால் ஏரளாமன விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கோவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,
“இத்திட்டத்தினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பதாகவும்,குறிப்பாக இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கூட நடத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், போக்குவரத்து வசதிக்காக விரைவாக செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதைக் தாங்கள் வரவேற்பதாக தெரிவித்த அவர்கள்,இது போன்ற திட்டங்களைக் செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைக் பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்”.