June 25, 2018
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் கட்டவேண்டும் 100அடி சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் பயணிகள் பாதுகாப்பு,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகரில் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்.இப்பகுதியில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதை தவிர்க்க அரசு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
மேலும்,காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில்,100அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் பார்ப்பதற்கும்,பயணிப்பதற்கும் பயணிகள் அச்சப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பிறகு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவே பாலம் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் ரகுபதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் கோவை மாவட்ட செயலாளர் கிஷோர் கோவை மாவட்ட தலைவர் குமார்,புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத்,பாமக தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ராமசுந்தரம்,மாவட்ட தலைவர் சுப்ரமணி,முகம்மது அலி,கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.