June 25, 2018
தண்டோரா குழு
ஜூன் 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பின் நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும்.ஆனால்,இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.