June 25, 2018
தண்டோரா குழு
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்குவது யார் என பேரவையில் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.முன்னாள் எம்.எல்.ஏ வேதாசலம் மறைவுக்கு பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது பேரவை துவங்கியதும் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
சினிமா துறை அழிவுக்கு காரணமானவர்கள் தமிழ் ராக்கர்ஸ்.திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது,இயக்குபவர் யார் என்று பேரவையில் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பினர்.மேலும்,தமிழ் ராக்கர்ஸை மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவியோடு தடுத்திட வேண்டும் என சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.ஆனால்,அறிவித்த சிறித நேரத்திலேயே அந்த இணையத்தளம் மீண்டும் வேறு லிங்கில் இயங்க துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.