• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முருங்கைக் கீரை சூப் செய்ய ?

June 25, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை – 2 கப்
கேரட் துருவல் – அரைகப்
தேங்காய் துருவல் – அரைகப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துண்டுகள் – 3
பூண்டு – 1
மல்லி இலை – ஒரு பிடி
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை:

முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பெரிய வெங்காயத்தையும்,இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும்.மல்லி இலையையும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம்.கேரட் துருவல்,தேங்காய் துருவல், பெரிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள்.வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி சூடாக்குங்கள்.சூடானதும் சீரகம்,முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள்.அதையும்,வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள்.அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.அத்துடன் மிளகுதூள்,பெருங்காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும்

மேலும் படிக்க