• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின் ஆன்மீக அரசியல் ‘நாத்திகத்தின் ஆயுள் முடிந்ததா?

June 23, 2018 தண்டோரா குழு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக தலம்! தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பிறமாநில அரசியல் தலைவர்களும், தொழில் அதிபர்களும் இங்கு வருவதும், அரங்கநாதரை தரிசித்து செல்வதும் வாடிக்கைதான்!

இதில், ஆச்சரியமே திராவிட கொள்கைகளில் மிகுந்த பிடிப்புடன் இருப்பதாக பேசிவரும் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்துக்கு வந்து, பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டது தான். இத்தனை ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு கூட அந்த கோவில் உள்ளே நுழைந்தது இல்லை. ஆனால், அக்கோவிலுக்கு போனது தி.மு.க.,வினர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அப்போது ஸ்டாலின் சென்ற கார் ஸ்ரீரங்கம் கோவிலின், ரெங்கா கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டது. அங்கு காரை விட்டு இறங்கிய ஸ்டாலினுக்கு கோவில் தலைமைஅர்ச்சகர் சுந்தர் பட்டர் தலை மையில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் வைத்து யாகம் செய்த மஞ்சள் சால்வை அணிவித்து ஸ்டாலின் நெற்றியில் சந்தனத்தை, சுந்தர் பட்டர் வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் உடனே அதை அழித்து விட்டார். பின்பு யானை மாலையிட்டு ஆசிர்வாதம் வழங்க, ஸ்டாலின் யானைக்கு கரும்புத்துண்டுகள், வெல்லக்கட்டியை வழங்கினார்.பின்னர் காரில் கோவிலை வலம் வந்து, அங்கிருந்து ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வருகை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பெரியார் வழி தொண்டர் கடவுள் மறுப்பு கொள்கையாளராக அறியப்பட்ட ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் மரியாதையை ஏற்றுக்கொண்டது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் வழக்கமாக ஸ்டாலின் நிகழ்ச்சிகளை வாட்ஸ் அப்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரும் திமுக பிரமுகர்களில் பலர் அவரது ஸ்ரீரங்கம் கோவில் விசிட் தொடர்பான படங்களையோ, தகவலையோ பகிரவில்லை. எனினும், பூசாரிகள்தான் ஸ்டாலின் காரை நிறுத்தி மரியாதை அளித்ததாக திமுகவினர் கூறி வருகிறார்கள்.

ஆனால், மறுபுறம் ‘வாட்ஸ் ஆப்’பில், ‘நாத்திகத்தின் ஆயுள் முடிந்தது; இந்து மதம் வென்றது’ என்ற தலைப்பில் விமர்சனங்கள் பரவி வருகின்றன. தமிழகத்தில் நாத்திகம் செத்துவிட்டது என்பதற்கு இது அடையாளம்,இதுவே நாத்திகத்தின் ஆயுள். திமுகவிற்கும் இந்துமதத்திற்கும் நடந்ததாக சொல்லபட்ட போரில் இப்பொழுது இந்துமதமே வென்றிருக்கிறது பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.இதுமட்டுமின்றி, ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் தாக்கம் உண்மையிலேயே தமிழக அரசியல் கட்சிகளை புரட்டிப்போட்டுள்ளது மு.க.ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் பயணம் மூலம் தெரிகிறது என்றும் கூறிவருகின்றனர்.

தமிழக பாஜக ஊடக தொடர்பாளரான நாராயணன் தனது ட்விட்டர் பதிவில்,

‘ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். வெளியே அரங்கனின் காலடியில் வரம் வேண்டி காத்திருப்பவரை பார்த்தாரா?’ என அங்குள்ள பெரியார் சிலையை நினைவூட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,

“ஆத்திகராக இருந்தால் முழுமையாக இந்துக்களை மதிக்க வேண்டும். கோவிலில் யாகம் ஏற்பாடு செய்வது ஆனால் பொட்டு வைத்தால் அதை அழிப்பது என்பது இந்து நம்பிக்கையை அவமதிப்பதாகும். சிறுத்தையின் புள்ளிகளை ஒருபோதும் அழிக்க முடியாது. திமுக ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது”. எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க