• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை மீறினால் ரூ25,000 வரை அபராதம் !

June 23, 2018 தண்டோரா குழு

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் தெர்மாகோல் பொருட்களையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களின் பயன்பாட்டுக்கு மாறிக்கொள்வதற்கு வசதியாக அரசு மூன்று மாதகால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் இன்று முதல், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

இதன்படி ஒருமுறை உபயோகித்து விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மோகோல் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது. முதல் முறை தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதமும், 2 வது முறை குற்றம் செய்தால் ரூ.10,000 அபராதமும், 3வது முறையாக தவறு செய்தால் ரூ.25,000 அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். மும்பையில் இந்த தடையை அமல்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை தடுக்கவும் 250 ஆய்வாளர்கள் அடங்கிய படைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. அதைபோல் இந்த தடையுத்தரவை அமல்படுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் நகராட்சிகளும் இதர உள்ளாட்சி மன்றங்களும் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்துள்ளன.

இது குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில்,

மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மாநில அரசு எடுத்துள்ள இந்த முடிவு வெற்றி அடையும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கான பொறுப்பு நம்முடையது. பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிப்பதோ, ஒழுங்குமுறை படுத்துவதோ, மறுசுழற்சி செய்வதோ இயலாத காரியம் என்பதாலேயே இத்தகைய தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

* கைப்பிடி மற்றும் கைப்பிடி இல்லாத அனைத்து பிளாஸ்டிக் பைகள், பெட் பாட்டில்கள்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கப், கரண்டிகள், போர்க்குகள், கண்டெய்னர்கள்.
* ஒரு பொருளை பத்திரப்படுத்த பேக் செய்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட்.
* பிளாஸ்டிக் ஸ்டிரா, பவுச்கள், உணவுகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்.
* தெர்மாகோலில் செய்யப்பட்ட அனைத்து அலங்கார பொருட்கள்.

தடையிலிருந்து விலக்கு பெற்ற பொருட்கள்

* மருந்து வகைகளை பேக் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்.
* பிளாஸ்டிக் பால் பாக்கெட்கள்.
* தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை பேக் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள்.
* பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேக்.
* திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக்.

மேலும் படிக்க