June 23, 2018
தண்டோரா குழு
தேசத்துக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 11-ம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா,
தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் தமிழகத்தில் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் பாராதிராஜவின் பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக புகார் அளித்தனர்.
இந்த புகார் திருவல்லிக்கேணி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சர்சைக்குரிய பேச்சு, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் பாரதி ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இவர் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்த நிபந்தனை ஜாமீனில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது