June 22, 2018
தண்டோரா குழு
நிர்மலா தேவிக்கு சென்னையில் குரல் மாதிரி சோதனை நடத்த கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்து சென்று குரல் மாதிரி சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையில் நிர்மலா தேவி தரப்பு பதிலையும் கேட்க வேண்டும் என்பதால். அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வத்தது. அப்போது நிர்மலா தேவி தர ப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை திங்கட்கிழமை நன்பகல் 2.15 ஒத்திவைத்து உத்தரவிட்டார்.