June 22, 2018
தண்டோரா குழு
ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அவரை விடாமல் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.இதையடுத்து,அந்த ஆசிரியருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக்,
“ஒரு ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும்,ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்”என கூறியுள்ளார்.