June 22, 2018
தண்டோரா குழு
சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகளை கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
8 வழி சாலை பணிக்காக கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலம் மட்டுமல்லாது, கொட்டகை,கிணறு,மரம்,பயிர்கள் போன்றவைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ 21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 9.04 கோடி வரை வழங்க வாய்ப்புள்ளது.முதிர்ச்சியடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ 50,000 வரை இழப்பீடு வழங்கவுள்ளதாகவும்,விவசாயிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.