• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை

June 22, 2018

அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்தபடும் கிரில்கேட்,ரோலிங் ஷட்டர்,மேற்கூரை பணிகளை நேரிடையாக வழங்க தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கிரில் குறிந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.அப்போது பேசிய கோவை மாவட்ட தலைவர் ரவி,

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 1.18% ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பழைய வரியான 5% குறைக்க மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.மேலும் கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும் அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது இல்லை.சொத்து பிணை இல்லாமல் மானியத்துடன் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பட்டா,ஸ்கொயர் ராடு,இரும்பு தகடுகள் போன்றவற்றின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாகுறை உள்ளதாகவும் அரசு தொழில் பயிற்சி பாட திட்டங்கள் துவக்கி பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கிரில் குறிந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க