தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ.
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
சர்க்கரை – 1 டீஸ்பூன்.
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்.
கரம் மசாலா – 1 டீஸ்பூன்.
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்.
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்.
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்.
வரமிளகாய் – 2.
கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்.
அரைத்த தக்காளி – 1 கப்.
நெய் – 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்.
கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது).
கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் நெய் ஊற்றி காய்ந்ததும்,கறிவேப்பிலை, வரமிளகாய்,சீரகப் பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி,பின் மல்லித் தூள்,மிளகாய் தூள் சேர்த்து,நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.நெய்யானது பிரிய ஆரம்பித்தால்,அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து,சிக்கன் துண்டுகள்,உப்பு,கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி,சர்க்கரை சேர்த்து பிரட்டி,மூடி வைத்து குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.பின் மூடியைத் திறந்து,அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5-6 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.சிக்கனானது நன்கு வெந்ததும்,அதனை இறக்கி,அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்