• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவ்வளவோ பாத்துட்டோம்.. இத பாக்க மாட்டோமா?

June 21, 2018 தண்டோரா குழு

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் கணவன் – மனைவியான தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருவரும் இருப்பதால் கண்டிப்பாக இவர்களுக்குள் சண்டை ஏற்படும் பலரும் எதிர் பார்த்தனர்.

அதன்படி முதல் வாரத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது போன்ற புரமோஷன் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறது.சற்று முன்பு வெளியான புரமோ வீடியோவில், சென்றாயன் நித்யாவிடம் பேசுகிறார்.

“நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வழியைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.தனிமை எவ்வளவு நாள்மா?” என்று கேட்கிறார்.அதற்கு நித்யா “நான் தனியா இருக்கேன்னு யார் சொன்னா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இது இருக்கும்.கன்ட்ரோல் பண்ணாக்க யாருக்குமே பிடிக்காதுல்ல.

உங்க தங்கச்சிய,மீடியாவுல போயி ரெண்டு போட்டோ வச்சிகிட்டு,‘ரெண்டு பேருக்கும் இடையில் தொடர்பு இருக்குனு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா? இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க? சொல்லுங்க” என்று கேட்கிறார்.

அப்போது,பாலாஜி “வேணும்… இந்த அவமானம் தேவை” என்று கூறுவது போலக் காட்டுகிறார்கள். மறுபக்கம் ‘எவ்வளவோ பார்த்துட்டோம்,இதைப் பார்க்க மாட்டோமா…” என்கிறார் நித்யா.

மேலும் படிக்க