• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ரஜினி வில்லா #3’வாக மாறிய தங்கும் விடுதி!

June 21, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் தங்கியிருந்த வில்லாவுக்கு,ரஜினி வில்லா என அதன் உரிமையாளர் பெயர் வைத்துள்ளார்.

காலவைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் குர்சியாங்கில் உள்ள அலீட்டா ஹோட்டல் & ரிசார்ட்டில் 10 நாட்கள் தங்கியுள்ளார்.இந்நிலையில் ரஜினி தங்கியுள்ள குர்சியாங் தங்கும் விடுதியின் வில்லாவுக்கு ரஜினி வில்லா #3 என அந்த விடுதியின் உரிமையாளர் பெயர் வைத்துள்ளார்.

மேலும், அந்த விடுதியின் ‘டீ’ சுவை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாக தெரிவிக்க,அதற்கும் ‘தலைவா’ ஸ்பெஷல் டீ என அதன் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க