June 21, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்த வந்த நிலையில் அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் பல்வேறு கட்சியினர் பார்வையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக 7370 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் கோவை மாவட்டத்திற்கு பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து இன்று எடுத்து வரப்பட்டது.
இந்த இயந்திரங்கள் அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள் முன்னிலையில் கோவையில் உள்ள பந்தய சாலை பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர காவல் துறை கண்காணிப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.