June 21, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஜூலை 11ம் தேதி துவங்க உள்ள நிலையில் திருநெல்வேலியின் 14 போட்டிகளும்,திண்டுக்கல் நத்தம் பகுதியில் 14 போட்டிகளும்,சென்னையில் 4 போட்டிகளும் நடைபெறவுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேலாளர் பாபா சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“டிஎன்பிஎல் மூன்றாவது சீசன் ஜூலை 11ம் தேதி திருநெல்வேலியில் தூவங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.மாவட்டங்களில் இப்போட்டிகளுக்கு நல்ல வரவேற்புள்ளதால் திருநெல்வேலியில் 14 போட்டிகளும்,திண்டுக்கல் நத்தம் பகுதியில் 14 போட்டிகளும்,சென்னையில் நான்கு போட்டிகளும்,இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் மூலம் மாவட்டங்களிலுள்ள அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்து வருவதாகவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பலர் ஐபிஎல் போட்டிகளுக்கு தேர்வாகி இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.சேலம் வீரர் நடராஜன்,சஞ்சய் யாதவ், வாஷிங்டன் சுந்தர்,ஜெகதீசன் போன்றோர் டிஎன்பிஎல் சீசனில் விளையாடியவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேபோல்,தற்போது நடைபெறவிருக்கும் மூன்றாவது சீஸனில் பங்கேற்றுள்ள காரைக்குடி,மதுரை தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கி இருப்பதோடு அவற்றின் பெயர்கள் முறையே ஐடிரீம் காரைக்குடி காளை,சீசெம் மதுரை பாந்தர்ஸ்,ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்,வீ.பி திருவள்ளூர் வீரன்ஸ் அணி வீ.பி.காஞ்சி வீரன்ஸ் அணி என மாற்ற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் மூன்றாவது சீசன் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாயும்,இரண்டாம் பரிசாக 60 லட்சம் ரூபாயும்,மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளுக்கு 40 லட்சம் ரூபாயும் எஞ்சிய நான்கு அணிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.
மேலும்,அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது”. எனவும் கூறினார்.