• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர்:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

June 20, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் கொள்கையால் நலிவடையும் நிலை இருந்து வரும் குன்னூர் அருவங்காட்டில் இயங்கி வரும் வெடி மருந்து தொழிற்சாலையில் பணியாற்றும் 1945 நிரந்தர பணியாளர்கள்,200 ஒப்பந்த பணியாளர்களின் நலன் கருதியும்,நீலகிரி பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும் சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி., கூட்டுக்குழு சார்பில் இன்று தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒரு நாள் அடையாள தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு உறுதுணையாக அகில இந்திய அளவில் 41 தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இதில் 11 தொழிற்சாலைகள் வெடிமருந்துகளை தயாரித்து வருகின்றன.இதில் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் ஒன்றாகும்.இந்த தொழிற்சாலை 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த மாதம் 21 ம்தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலை நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.1980 ஆம் ஆண்டில் இதே போன்று உற்பத்தி நிறுத்திவைப்பு சம்பவம் நடைபெற்றது. இதே போன்று தற்போது நடைபெறுமா என்ற அச்சம் தொழிலாளர் மத்தியில் இருந்து வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும்,விலை குறைவாக கொடுத்தாலும் மத்திய அரசு உற்பத்தி இலக்கை அதிகரிக்கவில்லை.நமது நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் 30 சதவீதங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது 70 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பாரம்பரியமுள்ள இந்த தொழிற்சாலை மத்திய அரசின் கொள்கையால் நலிவடையும் நிலை இருந்து வருகிறது.

இதனை கண்டித்து அருவங்காடு தொழிற்சாலையில் பணியாற்றும் 1945 நிரந்தர பணியாளர்கள்,200 ஒப்பந்த பணியாளர்களின் நலன் கருதியும்,நீலகிரி பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும் சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி., கூட்டுக்குழு சார்பில் இன்று தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒரு நாள் அடையாள தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமான தொழிலாளர்கள் தொழிகற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய குன்னூர் சட்டமன்ற உறுப்பினர்,

“நீலகிரியில் எந்த வித தொழிற்சாலைகளோ இல்லாத நிலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை எக்காரணம் கொண்டும் மூட விடமாட்டோம்.இதைப்பற்றி சட்ட மன்றத்தில் பேச போகிறேன்”என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய மக்களைவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன்,

“நான் வரும் 28 ஆம் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பிரச்சனையை குறித்து பேசி ஒரு நல்ல முடிவை பெற்று தருகிறேன்”என்று கூறினார்.

மேலும் படிக்க