June 18, 2018
தண்டோரா குழு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல்,தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில்,வேல்முருகன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து வேல்முருகனுக்கு நாகர்கோவிலில் உள்ள கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையேழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.