• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புகார் மனு

June 18, 2018 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரம் 68 வது வார்டு,80 அடி ரோட்டில் தேவர் மண்டபம் பகுதியில் புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை இராமநாதபுரம் 68 வது வார்டு,80 அடி ரோட்டில் உள்ள தேவர் மண்டபம் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் ஏராளமான குடியி௫ப்புகள் உள்ளன.இப்பகுதியில் மூன்று கல்யாண மண்டபம் மற்றும் பள்ளிகள்,வழிபாட்டுத் தளங்கள் உள்ளன.மேலும்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் குழந்தைகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையை கடந்து செல்வது அச்சுறுத்தலாக இ௫க்கும்.

மேலும்,அப்பகுதியில் வாரச்சந்தை சனிக்கிழமை நடைபெறுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை இ௫ப்பதால் புதியதாக வ௫ம் டாஸ்மாக் கடை வேண்டாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கபடமாட்டாது என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க