June 18, 2018
தண்டோரா குழு
நடிகர் எஸ்.வி.சேகர் வரும் ஜூலை 12-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி சேகர் மீது,சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியது.ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையில்,எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. எனினும்,தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் எஸ்.வி சேகர் மீது தமிழகம் முழுக்க போடப்பட்ட வழக்குகளில்,நெல்லையிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.மேலும்,ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.