ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டீசரைப் பாராட்டிய தனுசுக்கு நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்து அவரை மிகச்சிறந்த நடிகர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘ஜீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்து வருகிறார்.
அனுஷ்கா ஷர்மா,கேத்ரீனா கைப் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தின் டீசர்,ரம்ஜான் தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் யூடியூப்பில் வெளியானது.அதில்,குள்ள ஷாருக்கான் சல்மான் கானுடன் இணைந்து நடனமாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
யூடியூப் டிரேண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் அந்த டீசரை, நடிகர் தனுஷ் அற்புதமாக இருப்பதாக பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.அதற்கு பதில் ட்வீட் செய்த நடிகர் ஷாருக்கான், “உங்களின் தாழ்மையான கருத்துக்கு நன்றி. உங்களைப் போன்ற AAA+++ நடிகரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது