June 15, 2018
தண்டோரா குழு
கர்நாடகா-தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் வயநாடு,மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது.இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது.நேற்று நீரின் அளவு 37,000 கன அடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில்,மதுரை மீனாட்சி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கடவுள் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்.தமிழகத்துக்கு நேற்று இரவு 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் பிரச்னை இருக்காது.தமிழகம் – கர்நாடகா இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை வர வாய்ப்பில்லை.அணை நிறைய நிறைய இன்னும் தண்ணீர் திறக்கப்படும்.தொடர்ந்து தண்ணீர் திறக்க உள்ளதால்,இரு மாநில விவசாயிகளும் மகிழ்ச்சியடைவார்கள் எனக் கூறினார்.