June 15, 2018
தண்டோரா குழு
திருப்பத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரையில் அரசு போக்குவரத்து கழக ஒட்டுநர் மற்றும் நடத்துனரை போலீஸார் தாக்கியதை கண்டித்து திருப்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தினால் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதன் பிறகு நகர துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இளங்கோ யூனியன் தலைவர்களிடமும், தொழிலாளர்களிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டன.திருப்பத்தூரில் 2 மணி நேரமாக பேருந்து இயக்ககாததால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.