June 15, 2018
தண்டோரா குழு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் வேண்டுகோளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உடல் ஆரோக்கிய நிலை,மனநிலை,குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.