• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சண்முக பாண்டியனுக்காக கதை கேட்கும் இளைய தளபதி விஜய்!

June 15, 2018 tamilsamayam.com

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை,வைத்து சொந்த தயாரிப்பில் படம் எடுக்க இளையதளபதி விஜய் முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இளையதளபதி விஜய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.

அதுபோன்று நடிகர் விஜய்யின் மனதிலும் கேப்டன் விஜயகாந்திற்கு தனி இடம் உண்டு என்பதை தற்போது வெளியான செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த்,அரசியலில் தீவிரமாக இறங்கியபின்பு படங்கள் நடிப்பதை குறைத்து விட்டார்.

ஆனால் இதனை ஈடு செய்யும் விதமாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தற்போது சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.ஆனால் அவருக்கு மக்களிடம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால்,அவருக்கு உதவும் வகையில் இளைய தளபதி விஜய் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

நடிகர் விஜய்,சண்முக பாண்டியனை வைத்து சொந்த செலவில் படம் எடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பல இளம் இயக்குனர்களிடம் விஜய்,கதை கேட்டு வருகிறார்.அவருக்கு தான் என நினைத்து ஆவலுடன் கதை சொல்ல வந்த இயக்குனர்கள் பலரும்,விஜய்க்காக அவர் கதை கேட்கவில்லை என தெரிந்ததும் பின்வாங்கி இருக்கின்றனர்.

இருந்தாலும் விரைவில் கதை முடிவான ஆன பின்பு படத்தை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக விஜய் செயல்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க