June 14, 2018
தண்டோரா குழு
தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.இவர் ஷாருக்கானை வைத்து ஜீரோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார்.இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா,கத்ரினா கைப் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். இந்நிலையில்,இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும்,ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.