June 14, 2018
தண்டோரா குழு
ரம்ஜானையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பிறை தெரிந்தவுடன் ரமலான் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.முன்னதாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஜூன் 16ம் தேதி ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.எனினும் இன்று பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றவுள்ளது.பிறை தென்பட்டால் நாளை (ஜூன் 15) ரமலான் கொண்டாப்படும். இல்லாவிட்டால் ஜூன் 16ம் தேதி ரமலான் கொண்டாடப்படும்.
ஆனால்,தமிழகம் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் நாளை (ஜூன் 15ம் தேதி) ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராத நிலையில்,வார இறுதியில் ரமலான் பண்டிகை வருவதால்,மொத்தமாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்குச் செல்லவும்,சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளவும் பலர் எண்ணியிருந்தனர்.
எனினும் விடுமுறை குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராததால்,சிலர் தங்களது விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர்.இந்நிலையில்,ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.