• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் 2 வீட்டில் தவறு செய்தால் ஜெயில் தண்டனை !

June 14, 2018 தண்டோரா குழு

உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’.கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது.தமிழில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

கடந்த வருடத்தில் இருந்து,தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது ‘பிக் பாஸ்’. 100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.14 பிரபலங்கள்,60 கேமராக்களுடன் வருகிற 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இரண்டாவது சீஸனை கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிகாக ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிக் பாஸ்’ வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சீசனை போன்று இந்த சீசன் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.முதல் சீஸனில்,போட்டிகளில் தோற்றவருக்குத் தண்டனையாக அவர்மீது முட்டையை உடைத்து ஊற்றுவது,அரிசி மாவை ஊற்றுவது, மிளகாய்ப்பொடியைக் கரைத்து ஊற்றுவது,நீச்சல் குளத்துக்குள் தள்ளி விடுவது போன்றவை இருந்தன.

ஆனால்,பிக் பாஸ் 2 வில் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. ஏனெனில்,தற்போது ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஜெயில் செட்டும் போடப்பட்டுள்ளது.இதனால் கொடுக்கப்படும் டாஸ்க்கில் தோற்பவர்களும் இந்த தண்டனை வழங்கப்படும்.அந்த ஜெயில் ரூமில் இரும்பாலான ஒரு கட்டில் மற்றும் மேஜை,விளக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.எனவே,ஜெயில் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள் மெத்தை,தலையணை,போர்வை,ஏசி என எதுவுமே இல்லாமல் வெறும் கட்டிலில்தான் தூங்க வேண்டும்.

நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் யாருக்கு இந்தத் தண்டனைக்கு கிடைக்க போகிறது.எந்தப் போட்டியில் தோற்றவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க