June 14, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து காலை 11மணிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளம்பிய பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.பேருந்து மந்தடாபேரின் பவிலாஸ் பகுதியில் செல்லும் போது பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர்,வலதுபுறமாக திருப்பியுள்ளார்.அப்போது, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.30 பேர் படுகாயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா,மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.