June 14, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.இவரது வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது.பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்துக்கு “நோட்ஸ் ஆப் எ டிரீம்” என பெயரிடப்பட்டுள்ளது.இதில் அவரது இசை துறை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட குணாதிசயம் குறித்தும் இதில் பதிவாகியுள்ளதாம்.பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.