June 13, 2018
தண்டோரா குழு
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா படத்தின் வெற்றிக்கு பின் கோகுல்-விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் ஜூங்கா.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து தயாரித்துள்ள ‘ஜூங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இவ்விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன்,
“தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது,என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா⁉ என்று விஜய் சேதுபதி கேட்டார்.அப்போது அவரிடம்,உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன்.முதல் படத்தில் அவ்வளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன்.அதுமட்டுமில்லாமல்,அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.தன்னம்பிக்கை,விடாமுயற்சி,நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம்.அவர் மேலும் வளர வாழ்த்துக்கள்” என்று பேசினார்.