June 13, 2018
தண்டோரா குழு
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நேற்று ஒரு நாள் 312 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறை நான்காவது நாளாக தடை விதித்துள்ளது.
அதிகப்பட்சமாக வால்பாறை அடுத்த சின்னகல்லாறு பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.குறைந்த பட்சமாக கோவையில் உள்ள பீளமேடு பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.