June 12, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி டெமி கிரிமினாலஜி படித்து வருகிறார். தனது வீட்டில் சிலந்தி ஒன்றை கண்ட அவர் பதறிப்போயுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம் என நினைத்துள்ளார்.
சிலந்திக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் உணவை ஆர்டர் செய்தால் அதை டெலிவெரி செய்ய யாராவது வருவார்கள் அப்படி வந்தால் அவர்களை வைத்து சிலந்தியை விரட்டி விடலாம் என்பது தான் டெமியின் திட்டம். எனினும், இந்த உண்மையை மறைக்காமல் உணவு ஆர்டர் செய்யும் போது நிறுவனத்திற்கே டெலிவெரி குறிப்புகளில் கூறி மெசேஜ்யும் அனுப்பியுள்ளார். ஆனால் இந்த மெசேஜ் பார்த்து கேஎப்சி நிறுவனத்திற்கு அழுவதா சிரிப்பதா தெரியாமால் இதற்கும் பதிலயளிக்கும் வகையில் உணவை டெலிவரி செய்பவர் உங்களை விட பயந்தவராக இருந்தால் என்ன செய்வது சரி அனுப்புகிறோம் என்றது.
டெமி வீட்டுக்கு டெலிவரி வந்தது எதிர்பார்த்தபடியே டெலிவரி பாய் எனக்கும் சிலந்தி என்றால் ரொம்ப பயம் என்னால் சிலந்தியை விரட்ட முடியாது என கூறியுள்ளார். ஆனால் டெமி விடாமல் கெஞ்சவே அவர் உதவி செய்ய முன்வந்துள்ளார். பிறகு டெலிவரி பாய் தலைக்கு ஹெல்மெட் அணிந்துகொண்டு எப்படியோ சிலந்தியை பிடித்து கொன்று டாய்லெட்டில் வீசியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்த டெமி மேலும் அதன்பிறகு ஒரு நாள் முழுக்க டாய்லெட்டை பயன்படுத்தவில்லை.
இது குறித்து டெமி டெலிவரி செய்தவரின் புகைப்படத்தோடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அவை சமூக வலைதளங்களில் பல கமெண்டுகளுடன் வேகமாக பரவி வருகிறது.