June 12, 2018
தண்டோரா குழு
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம்,1996-ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திலிருந்தே விசாரணை நடத்த வேண்டும்.எஸ்பி அந்தஸ்துக்கு இணையான ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்.விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது. மேலும்,முதல் தகவல் அறிக்கையை சீல் வைத்த கவரில் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஆகஸட் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.