June 12, 2018
தண்டோரா குழு
கோவையில் பாஜகவின் நான்காவது ஆண்டு சாதனையை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
பாஜகவின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தனர்.இதில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், தொழில் கடன்,இலவச சிலிண்டர், அனைவருக்கும் வீடு,கழிப்பிட வசதி உட்பட இதுவரை பல்வேறு சாதனையாக்கி உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவின் தொண்டர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.