June 12, 2018
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி,கோவை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பலத்த மழை காரணமாக இன்று கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.