June 11, 2018
தண்டோரா குழு
கமல்ஹாசன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.
இதுமட்டுமின்றி முதல் பாகத்தை எடுக்கும் போதே இரண்டாவது பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்துவிட்டார் என சொல்லப்பட்டது. ஆனாலும் இன்னும் படத்தின் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளிவந்தது. இதற்கிடையில்,’எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற கமல் வசனத்துடன் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹசனும், இந்தி ட்ரைலரை அமீர்கானும் தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி ஆரும் வெளியிட்டனர். இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் டிரெய்லர் வெளியானாலும் அதில் ஒரு வசனம் மட்டும் மாறியுள்ளது. அதாவது, தமிழில் ‘எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற கமல் வசனம் இடம் பெற்றுள்ளது. தெலுங்கிலும் இதே வசனம் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியில் மட்டும் சற்று மாற்றப்பட்டுள்ளது.
அதில், ‘எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற வசனத்திற்கு பதில் “முசல்மான இருப்பது தவறவில்லை, ஆனா உங்கள மாதிரி மனுஷனா இருப்பதுதான் ஹ்ராம்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதனால், தற்போது ஏன் இந்த மாற்றம் என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஸ்வரூபம் படம் தமிழில் வெளியாக கூடாது என தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.