• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் பையில் வைத்துருந்த செல்போன் பவர் பேங்க் வெடித்துச் சிதறியது

June 11, 2018 தண்டோரா குழு

சீனாவில் பேருந்தில் சென்ற பயணி ஒருவரது பையில் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்த சம்பவம் சி.சி.டி.வி.காட்சியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த பையில் பவர் பேங்க் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்தபடி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் சகபயணிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக திடீரென்று பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்தது, இதில், அவரது பை முழுவதும் தீப்பற்றியது உடனே பையை அந்த நபர் கீழே வீசியதால் அவர் சிறிது காயத்துடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது.

வழக்கமாக மொபைல் போன்கள் தீப்பிடிக்கும் சம்பவம் கொஞ்சம் காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பவர் பேங்க்கும் வெடித்து தீபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலயதலங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க